தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாது என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து  செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்திடம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது கட்சியின் தலைவர் அறிக்கை மூலம் 2026ஆம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.