தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரு தினங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக மண்டபம் பகுதியில் வீடுகளை சுற்றி இடுப்பளவு தண்ணீர் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மண்டபம் பகுதியில் தண்ணீர்  சூழ்ந்த  பகுதிகளுக்கு நேரில் சென்றனர். அவர்கள் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்த போது சாப்பாடு கூட இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறினார்கள். உடனடியாக அந்த மக்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறித்து தமிழக வெற்றி கழகத்தினர் உதவி செய்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.