சென்னையில் நடைபெற்ற “P 2 – இருவர்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த தயாரிப்பாளர் கே ராஜன் பெண் நடிகை ஒருவரை அழைத்து அவரை மேலும் கீழும் ஆக பார்த்துவிட்டு பின் உட்கார சொல்லி பஞ்சாபி பலகாரம் பார்த்தாலே பசி ஏறும் என அவரை வர்ணிப்பதாக நினைத்து அவர் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

கேரளா சினிமா துறையில் ஹேமா கமிட்டி தற்போது பேசப்பட்டு வரும் இந்த சூழ்நிலையிலேயே பொது மேடையில் ஒரு பெண்ணை இப்படி பேசுவது சரியான முறை தானா மேடையில் வைத்து இப்படித்தான் பேசுவார்களா? கேரளாவை போல் தமிழ்நாட்டிலும் நடவடிக்கையை எடுக்கப்பட வேண்டும் கமிட்டி அமைக்கப்பட வேண்டும்

அப்போதுதான் யார் யார் எவ்வளவு மோசமானவர்கள் என்பது தெரியும் என நெட்டிசன்கள் கடுமையாக தயாரிப்பாளரின் இந்த பேச்சை கண்டித்து கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்