நீங்கள் இஎம்ஐ செலுத்த தவறவிட்டால் லேட் பேமென்ட் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களிடம் இருந்து வசூல் செய்வார்கள். இந்த கட்டணம் நீங்கள் கடன் வாங்கிய வங்கியை பொறுத்து அல்லது உங்களின் இஎம்ஐ தொகையை பொறுத்து மாறுபடலாம். இஎம்ஐ கட்ட தவறினால் உங்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். இதனைத் தவிர அபராதமாக வட்டியும் வசூல் செய்யப்படும். அடிக்கடி மற்றும் நீண்ட நாட்களுக்கு பேமென்ட் செலுத்த தவறும் பட்சத்தில் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும். இஎம்ஐ கட்ட தவறிவிட்டால் உடனடியாக உங்கள் வங்கியை தொடர்பு கொண்டே இது தொடர்பாக பேசி விடுவது நல்லது.