
மேற்குவங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மொய்த்ரா. இவருக்கு 50 வயது ஆகும் நிலையில் பினாகி மிஸ்ரா (65) என்பவரை திருமணம் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் மற்றும் வழக்கறிஞர். இவர்கள் இருவருக்கும் ஜெர்மனியில் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் அது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிறது.
ஆனால் இருவரும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதில் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருக்கும் நிலையில் புரி தொகுதியில் இருந்து நான்கு முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர். மேலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
எம்பி மஹூவா மொய்த்ரா யார்.?
அசாமில் 1974ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்த எம்பி மஹூவா மொய்த்ரா, முதலிலே ஒரு மூலதன முதலீட்டுத் துறையில் (Investment Banker) பணியாற்றினார். பின்னர் 2010ல் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தார். 2019ல் மேற்குவங்கத்தின் கிருஷ்ணநகர் தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் 2024ல் மீண்டும் வெற்றி பெற்றார். பாராளுமன்றத்தில் எழுப்பிய “ஏழு அம்ச தனிநாயக அடையாளங்கள்” பற்றிய உரையால் தேசிய அளவில் புகழ் பெற்றவர்.
பினாகி மிஸ்ரா யார்?
1959 அக்டோபர் 23 அன்று ஒடிசாவின் புரியில் பிறந்த பினாகி மிஸ்ரா, ஒரு மூத்த சட்டவாதி மற்றும் அனுபவமிக்க அரசியல்வாதி. டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து சட்டத்தில் பட்டம் பெற்ற பினாகி, ஸ்டீபன்ஸ் கல்லூரியில் வரலாற்றில் BA (Hons) முடித்துள்ளார். 1996ல் இந்திய தேசிய காங்கிரசில் இருந்து அரசியலுக்கு வந்த அவர், பின்னர் பிஜேடி கட்சியில் சேர்ந்தார். 2009, 2014 மற்றும் 2019 ஆண்டுகளில் ஒடிசா மாநிலத்தின் புரி தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றவர்.