
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் வருகிற 27ஆம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டினை பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்.
இந்த மாநாட்டை முன்னிட்டு இன்று நடிகர் விஜய் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதோடு முதல் மாநாட்டில் அனைத்து விதமான விமர்சனங்களுக்கு பதிலடி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய கையில் GOAT என்ற வாசகம் அடக்கிய மோதிரத்தை போட்டபடி ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.