
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் யாகுத் புரா பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நேற்று பணம் எடுப்பதற்காக ஒரு நபர் சென்றுள்ளார். அப்போது அவர் ஏ.டி.எம். ல் கார்டை சொரிகிய பின்பு ரூபாய் 3000 வித்டிராவல் செய்வதற்காக பதிவு செய்துள்ளார். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து 4000 ரூபாய் வந்துள்ளது. அதனை பார்த்து அந்த நபர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதேபோன்று அந்த ஏ.டி.எம்.க்கு சென்ற மற்றொரு நபருக்கும் 3 ஆயிரம் பதிவு செய்த போது 4000 ஆயிரம் ரூபாய் வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் 3 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இது குறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பதற்காக கூட்டமாக திரண்டுள்ளனர்.
ஒவ்வொருத்தரும் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையத்திக்கு சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.
பின்பு இதுகுறித்து போலீசார் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த வங்கி அதிகாரிகள் எந்திரத்தை சோதனை செய்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அதிகளவில் பணம் வந்தது தெரிய வந்தது. பின்பு ஏ.டி.எம். மையத்தை சுற்றி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.