9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.. இதில் மொத்தம் 20அணிகள் இடம்பெற்றுள்ளன. உலக கோப்பையில் இரண்டாவது போட்டி இந்திய நேரப்படி இன்று(ஜூன் 2) இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் ஸ்டேடியம், கயானா மைதானத்தில் தொடங்கி நடந்தது. இதில் வெஸ்ட் இண்டீஸ் – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது , முதலில் களமிறங்கிய பப்புவா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது . இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

பப்புவா அணியில், சீஸி பாவ் அதிகபட்சமாக 43 பந்தில் 50ரன் எடுத்தார். மேலும் டோரிகா 18 பந்தில் 27 ரன்கள் அதேபோல் வாலா 21 (22) எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்கள் ரஸல் மற்றும் ஜோசப் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில் சேஸ் அதிரடியாக ஆடி 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். கிங் 29 பந்தில் 34 ரன்கள் எடுத்தார். இருப்பினும் தட்டுத்தடுமாறி 19 ஓவரில் 5 விக்கெட் இழந்து 137 ரன் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 257 ரன்கள் குவித்து, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது குறிப்பிடத்தக்கது. அதே அதிரடி ஆட்டத்தின் எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே..