
ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ். இவருக்கு 93 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். இவர் பிரபல ஸ்டார் வார்ஸ் படங்களின் டார்த் வேடர் கதாபாத்திரங்கள் மற்றும் 90களில் வெளியான லயன் கிங் படங்களில் முஸாஃபா கதாபாத்திரம் ஆகியவைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.
இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி ஆஸ்கர் அகாடமி கௌரவித்தது. மேலும் இவர் திடீரென மரணமடைந்தது பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.