
சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியும் சிறப்பான வீரர்களை போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் வீரர்களை அணிகள் போட்டி போட்டு வாங்கியுள்ளது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் வீரர் மார்க்கஸ் ஸ்டோயினஸை 11 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. அதன்பிறகு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷை 3.40 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதே போன்ற மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான கிளென் மேக்ஸ்வெலை 4.2 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.