
மத்திய பிரதேஷ் மாநிலம் குணா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் சுமித். இவர் நேற்று மதியம் 3:30 மணி அளவில் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றில் விழுந்து விட்டார். இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
140 அடியில் சிக்கி இருந்த சிறுவன் 16 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் அளிக்கும் விதமாக சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து சடலத்தை பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.