தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் யார் அந்த சார்  என்ற பேட்ஜ் அதிமுகவினர் வந்த நிலையில் கையில் பதாகைகளையும் ஏந்தி வந்தனர். இதன் காரணமாக சபாநாயகர் அவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்ட நிலையில் அவையில் இருந்த பாதுகாவலர்கள் அவர்களை குண்டு கட்டாக வெளியேற்றினார். அதாவது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் ஞானசேகரன் தவிர மற்றொருவருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர் கட்சிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் அதிமுக வெளியேறிய நிலையில் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் சட்டசபைக்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்த நிலையில் அது காற்றடைத்த பலூன் போல் இருக்கிறதே தவிர அதில் வேறு ஒன்றும் இல்லை. அது ஆளுநரின் உரையாக இல்லாமல் திமுகவின் சுய விளம்பரமாக சபாநாயகர் உரையாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளாக எந்த திட்டமும் இல்லாத நிலையில் திமுக சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கிறது. மேலும் ஆளுநர் தானாக வெளியேறவில்லை. அவரை திட்டமிட்டு வெளியேற்றி உள்ளனர் என்று கூறியுள்ளார்.