தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே மோதல் நீடித்து வருகின்ற நிலையில் சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடரில் தொடக்க உரையில் ஆளுநர், தமிழ்நாடு, காமராஜர், அண்ணா, பெரியார், அம்பேத்கர், கருணாநிதி போன்ற பெயர்களை உச்சரிக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த செயலுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அன்றைய தினம் ஆளுநர் அவையில் இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து தீர்மானம் இயற்றினார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ரவியின் செயலை கண்டித்து ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நாளை நடைபெறும் என இந்திய சமூக ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. சட்டமன்ற ஜனநாயக மரபை மீறிய ஆளுநர் செயல் கண்டனத்திற்குரியது. இவரை ஆளுநர் பதவியில் இருந்தும், தமிழகத்தை விட்டும் வெளியேற்ற வேண்டும் என எஸ் டி.பி.ஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.