மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் காலதாமதத்திற்கு ஆளுநரே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

​ஆளுநர் இவ்வாறு தவெக-வை அழைக்கத் தாமதப்படுத்துவதே தமிழகத்தில் ‘குதிரை பேரத்திற்கு’ (Horse Trading) வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், “கம்யூனிஸ்ட்டுகள் எப்போதும் குதிரை பேரத்திற்கு எதிரானவர்கள். ஆளுநர் தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தால், தற்போது எழுந்துள்ள தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது” என்றும் அவர் சாடினார். தவெக ஆட்சி அமைக்க ஆதரவு பெருகி வரும் நிலையில், சிபிஎம்-மின் இந்த விமர்சனம் ஆளுநர் மாளிகைக்கு விடுக்கப்பட்ட அழுத்தமாகப் பார்க்கப்படுகிறது.