சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தோனி இந்த போட்டியில் 30 ரன்கள் வரை எடுத்திருந்த நிலையில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 67 ரன்கள் வரை எடுத்திருந்தார். இந்த தோல்விக்கு பிறகு சிஎஸ்கே மீது மீண்டும் ரசிகர்கள் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். ஏற்கனவே இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் சிஎஸ்கே இந்த போட்டியோடு சேர்த்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது தற்போது சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது மிச்சல் ஸ்டார்க் பந்து வீசியபோது அது விஜய் சங்கரின் காலில் நேராகப்பட்டது.

 


ஆனால் டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் அபிஷேக் பேட் பட்டடிச்சி என்று கூறியதால் கேப்டன் அக்சர் படேல் ரிவ்யூ எடுக்காமல் விட்டுவிட்டார். விஜய் சங்கரின் காலில் பந்து பட்டாலும் அது தெளிவான எல்டபிள்யூவாக இருந்தது. ஒருவேளை ரிவ்யூ எடுத்து இருந்தால் சிஎஸ்கே பவர் பிளேயில் மூன்றாவது விக்கெட்டை இழந்திருக்கும். அந்த சமயத்தில் பெவிலியிலிருந்து தோனி அதிரடியாக அவுட் என கையசைத்தார். அப்போது தோனியின் முகத்தில் வந்து சிரிப்பு ரசிகர்களை கவர்ந்தது. தோனியின் இந்த செயலை ஸ்டார்க் மிகவும் ரசித்தார். இது நடுநிலை தீர்ப்பை விடவும் தோனி மிக துல்லியமாக ரிவ்யூ எடுக்கக் கூடியவர் என்பதை உணர்த்துவதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் தோனி விக்கெட் கீப்பிங் செய்யாமல் இருந்தாலும் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.