தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி ரன் பேபி ரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்தார். இதேபோன்று வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஜிவி பிரகாசும் ஒரு கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து இருந்தார். அதன் பிறகு ஜி.வி பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே பாலாஜி இருவரும் அணிந்திருந்த டி-ஷர்ட் ஒரே மாதிரியாக இருக்கும் நிலையில் தற்போது ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை வலைதளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் ஆர்ஜே பாலாஜி மற்றும் ஜிவி பிரகாஷ் அணிந்திருந்த டி ஷர்ட் என்ன பிராண்ட் மற்றும் அதன் விலை என்ன என்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து அதையும் வைரலாக்கி வருகிறார்கள். அதாவது லூயிஸ் பிராண்ட் டீ-ஷர்ட்டை இருவரும் அணிந்திருந்ததாகவும் அதன் விலை ஒரு லட்சம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த தகவல் தற்போது வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.