
கிரீன்லாந்தில் பனி மூடிய ஆர்டிக் பிரதேசம் உள்ளது. இங்கு ராட்சத வைரஸ்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்களால் நன்மையே விளையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த வகை வைரஸ்கள் முதல்முறையாக கடந்த 1981 ஆம் ஆண்டு கடலுக்குள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதல்முறையாக இது பனிக்கட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றை மனித கண்களால் மட்டும் இன்றி மைக்ரோஸ்கோப்பினாலும் பார்க்க முடியாது.

இந்நிலையில் டென்மார்க்கில் உள்ள ஆர்ஹஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களால் நன்மை மட்டும்தான் நடக்கும் என்று கூறியுள்ளனர். அதாவது காலநிலை மாற்றத்தால் தற்போது ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருகி வருகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்கள் பனி உருகாமல் தடுக்கும் பணியை செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதாவது இவைகள் பனியை உருக்கும் ஆல்கே-களை அழித்து பனி உருகாமல் பார்த்துக் கொள்ளும் என்று மைக்ரோ பையோம் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அது எந்த அளவுக்கு வீரியம் கொண்டது என்பது சரிவர தெரியவில்லை. மேலும் இதை ஆராய்ச்சியின் மூலமே கண்டுபிடிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.