பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார்.

அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண வந்த விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.