தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நாலையில் நடிகர் ராம் சரணுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது நடிகர் ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவர் திரைத்துறையில் ஆட்சிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் ராம் சரணுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.