
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, இந்தியா மே 7-ஆம் தேதி அதிகாலை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் பிடிப்பிலுள்ள காஷ்மீர் (PoK) பகுதியில் பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய விமானத் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது. தாக்குதல் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவ, பொதுமக்கள் கூகுளில் “India declares war?”, “India fired missile Pakistan?” என்ற போன்ற கேள்விகளை அதிக அளவில் தேடியுள்ளனர்.
அதிர்ச்சியளிக்கவைக்கும் வகையில், “What is Sindoor?” என்ற தேடல் கூட பாகிஸ்தான் மக்களிடையே டிரெண்டிங் ஆனது. இந்திய கலாசாரத்தில் திருமணமான பெண்கள் அணியும் சிந்தூர் (குங்குமம்) என்பதை கருத்தில் கொண்டு ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது பகல்காம் தாக்குதலில் ஆண்களை மட்டுமே குறி வைத்தது தாக்குதல் நடத்தியதால் பெண்கள் குங்குமம் வைக்க முடியாமல் வேதனையில் ஆழ்ந்த சம்பவத்தை மனதில் வைத்து ஆப்ரேஷன் சிந்துர் என்ற பெயர் வைக்கப்பட்டது.
இதற்கிடையில், “White Flag” என்ற தேடலும் கூகுளில் அதிக அளவில் பதிவாகியுள்ளது. யுத்த சூழ்நிலையில் ‘White Flag’ என்பது சரணடையும் சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. இது, பாகிஸ்தான் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. ஆனால், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தாக்குதல் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்; பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைப்பதற்கல்ல என்று தெளிவாக அறிவித்துள்ளது. இருப்பினும், பாகிஸ்தானின் மக்கள் மத்தியில் உருவான பதற்றம், இந்தியாவின் இந்த நடவடிக்கை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகும் என்பதைக் காட்டுகிறது.