ஆசிய கோப்பை 2023க்கான அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. 17 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியில் விராட் கோலியுடன் சண்டைபோட்ட வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் சேர்க்கப்படவில்லை.

ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக், சமீபத்தில் விளையாடிய 16வது சீசனில் ஆர்சிபியின் விராட் கோலியுடன் சண்டையிட்டார். அதே நேரத்தில், ஆசிய கோப்பையின் மூலம், ரசிகர்கள் இருவரையும் மீண்டும் ஒருமுறை நேருக்கு நேர் பார்க்க விரும்பினர், ஆனால் ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரைத் தங்கள் அணியிலிருந்து விலக்கி வைக்க முடிவு செய்தது தேர்வு குழு. ஐபிஎல் போட்டியின் போது, ​​விராட் கோலி மற்றும் நவீன் -உல்-ஹக் இடையே சண்டை ஏற்பட்டது. அதன் பிறகு இரு வீரர்களும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி, பதிவு மூலம் ஒருவரையொருவர் விமர்சித்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஆப்கானிஸ்தான் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது. ஆப்கானிஸ்தானின் ஆசிய கோப்பை அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து சற்று வித்தியாசமானது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய ஃபரீத் அகமது, அஸ்மத்துல்லா உமர்சாய், ஷாஹிதுல்லா கமால் உள்ளிட்டோர் அணியில் இடம் பெறவில்லை.

தேர்வுக் குழுவின் முடிவிற்குப் பிறகு நவீன் இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.”உங்கள் கண்கள் இருளுடன் எவ்வளவு நன்றாகப் பொருந்தினாலும், அதை ஒளி என்று நீங்கள் தவறாக நினைக்க மாட்டீர்கள்.” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு விராட் கோலி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நவீனை கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் இருவரையும் நேருக்கு நேர் மோதும் ஆட்டத்தை பார்க்க முடியவில்லை என்றும் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து நவீன் நீண்ட நாட்களாக வெளியேறினார். கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார். 23 வயதான நவீன் மொத்தம் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகளில் 5.78 என்ற எக்கனாமியுடன் 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான 3 ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தது. இதன் பிறகும் தேர்வாளர்கள் நவீனை தேர்வு செய்யவில்லை. நவீன் சமீபத்தில் வைட்டலிட்டி ப்ளாஸ்டில் லீசெஸ்டர்ஷைர் அணிக்காக ஆடினார்.. இங்கு அவர் 5 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேசமயம் ஐபிஎல் 2023ல், லக்னோ சூப்பர்ஜெயண்ட்ஸ் அணிக்காக அவர் 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிக் பாஷ் லீக், லங்கா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், பங்களாதேஷ் சூப்பர் லீக் போன்ற டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் நவீனுக்கு உள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் ஆசிய கோப்பை அணியை அறிவித்தது. 17 பேர் கொண்ட அணியில் ஃபரீத் அகமது மற்றும் வஃபாதர் மொமண்ட் ஆகியோர் இடம் பெறவில்லை. அஸ்மத்துல்லா உமர்சாய் காயம் காரணமாக அணியில் இல்லை. குல்பாடின் நைப் மற்றும் கரீம் ஜனத் ஆகியோர் பேக்அப் ஆல்ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயத்தில் இருந்து திரும்பிய நஜிபுல்லா சத்ரான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இந்த காயம் காரணமாக அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானின் முழு அணி பின்வருமாறு.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 முதல் தொடங்க உள்ளது. 6 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப்-ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகளும், குரூப்-பியில் வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. போட்டியின் இறுதிப் போட்டி செப்டம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. மறுபுறம், ஆப்கானிஸ்தான் தனது முதல் போட்டியை செப்டம்பர் 3 ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூரில் பங்களாதேஷுக்கு எதிராக விளையாடுகிறது. போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 13 போட்டிகளில் 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் எஞ்சிய இறுதிப் போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் இலங்கையில் மட்டுமே விளையாடவுள்ளது.

ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (c), ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகில், ரஷீத் கான், குல்பாடின் நைப், கரீம் ஜனத், அப்துல் ரஹ்மான், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், நூர் அஹ்மத், சுலிமான் சஃபி, ஃபசல்ஹாக் ஃபாரூக்கி.

https://twitter.com/Cricketracker/status/1695853982865076323