
மும்பையின் மலாட் பகுதியில் பணியாற்றி வரும் 38 வயதான ஒரு திருமணமான பெண், கடந்த மூன்று ஆண்டுகளாக ஹிமான்ஷு குமார் சிங் என்ற நபருடன் நெருக்கமாக நட்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹிமான்ஷு நெருக்கத்தை தவறாக பயன்படுத்தி, அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அவற்றை சமூக ஊடகங்களில் பகிருவதாக மிரட்டி, பணம் மற்றும் நகைகளை பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஹிமான்ஷு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியதால் அந்த பெண் ரூ.6.25 லட்சம் பணம் மற்றும் ரூ.6.75 லட்சம் மதிப்புள்ள நகைகள் வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும் ஹிமான்ஷு அந்த பெண்ணை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த தகவல்களின் அடிப்படையில் பங்கூர் நகர் காவல்துறையில், ஹிமான்ஷுவுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை, மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிமான்ஷு தற்போது தலைமறைவாக இருப்பதால், போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.