பொதுவாக கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவற்றில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமாடுவது பற்றி மதுரை உயர்நீதிமன்றம் புது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன்- குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க சைபர் பிரிவில் தனி பிரிவை உருவாக்க வேண்டும். அத்துடன் சாதி பாடல்களை ஒலிபரப்பவில்லை என்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். மேலும் குற்றம் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.