சட்டப் பேரவையில் ஆளுநர் உரையில் ஏற்பட்ட அத்தனை நிகழ்வுகளும் திமுக-ஆளுநர் விவகாரத்தின் உச்சக்கட்ட அரங்கேற்றமாக அமைந்து விட்டது. ஆளுநர் உரையில் சில சொற்களை தவிர்ப்பதற்காக அதை அவை குறிப்பில் இடம்பெறாது எனக் கூறி அரசு அச்சிட்டு கொடுத்த ஆங்கில உரையும், சபாநாயகர் வாசித்த தமிழாக்க உரைதான் அவை குறிப்பில் ஏற்றப்படும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

சமீபத்தில் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது சர்ச்சையை கிளப்பியது. அதுமட்டுமின்றி தமிழக வரலாற்றிலே ஆளுநர் முதன் முதலாக வெளிநடப்பு செய்த சம்பவமாகவும் அமைந்தது. இந்நிலையில் ஆளுநரின் அடாவடிப் போக்கிற்கு உடனடி எதிர்வினையாற்றி ஆளுநரை அவையை விட்டே வெளியேற வைத்த மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து வீசிக சார்பில் பாராட்டினோம் என திருமாவளவன் டுவிட் செய்திருக்கிறார்.