ஜப்பானில் மனித உடலின் சதையை சாப்பிட்டு 48 மணி நேரத்தில் உயிரைக் கொல்லும் ஸ்ட்ரெப்டோகாக்கல் டாக்ஸிக் ஷாக் சிண்ட்ரோம்  பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த மாதம் இரண்டாம் தேதி நிலவரப்படி இந்த நோயால் 977 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருட இறுதிக்குள் 2500 பேர் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மனித உடலில் வாழும் இந்த பாக்டீரியாக்கள் தோல் நோய்கள், காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சையின் போது ரத்த நாளங்களில் நுழைய வாய்ப்பு இருக்கிறது. தூய்மையோடு இருந்தால் தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.