இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதாவது உங்களுக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது இலவசமாக ஐபோன் தருகிறோம் என்று கூறி ஆன்லைன் மூலமாக பல லட்சம் உங்கள் மோசடி செய்கின்றன. அதனைப் போலவே நீங்கள் பத்தாயிரம் ரூபாய் மட்டும் செலுத்தினால் 10 லட்சம் மதிப்புள்ள காரை கூப்பனில் பெறலாம் என்றும் பொதுமக்களை ஏமாற்றி லட்சங்களில் பணம் பறிக்கின்றனர்.

எனவே இது போன்ற ஆன்லைன் மூலமாக வரும் அழைப்புகளை பொதுமக்கள் நம்பி யாரும் தங்களின் பணத்தை இழக்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்க் மற்றும் வங்கி விவரங்கள் ஆகியவற்றை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் பரிசு விழுந்து உள்ளதாக கூறி பணம் செலுத்தும் படி கேட்டால் பொதுமக்கள் தங்களை எச்சரித்துக் கொள்ளும் படியும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.