ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் தற்போது அம்பானி மற்றும் அதானி மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார். அதாவது பிரதமர் மோடி ஆதிவாசி நிலங்களை வெளியில் இருந்து வந்தவர்கள் கைப்பற்றுகிறார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது முஸ்லிம்களை குறிப்பிட்டு கூறுவதாக பிருந்தா குற்றம் சாட்டிய நிலையில் ஆதிவாசி நிலங்களை ஆக்கிரமித்தது அம்பானி மற்றும் அதானி என்று கூறியுள்ளார்.

ஜார்கண்டில் பாஜக பொய் மற்றும் நச்சு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. ஆதிவாசி மக்களின் நிலங்களை வெளியிலிருந்து வந்தவர்கள் திருடுகிறார்கள் என்று பொய் பேசுகிறார்கள். அவர்களின் நிலங்களை வெளியிலிருந்து வந்தவர்கள் திருடவில்லை. அம்பானியும் அதானியும் தான் பெரும் கார்ப்பரேட் சுரங்க நிறுவனங்களும் தான் ஆதிவாசிகளின் அனுமதியே இல்லாமல் அவர்களின் நிலங்களை பறிக்கிறார்கள் என்றார். மேலும் பிருந்தா காரத்  அம்பானி மற்றும் அதானி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது ஜார்கண்ட் அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.