ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக போஸ்ட் மெட்ரிக் மற்றும் பிரி மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் மற்றும் பெண் கல்வி ஊக்குவிப்பு தொகை திட்டம் உள்ளிட்ட பல உதவி திட்டங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நடப்பு காட்டில் இந்த கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான இணையதளம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன் அடைய விருப்பமுள்ள மாணவர்கள் ஆதார் கார்டு மற்றும் ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாருடன் வங்கி கணக்கு இணைக்காதவர்கள் சம்பந்தப்பட்ட வங்கிகளை அணுகி ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இந்த விவரங்களை மாணவர்கள் அனைவருக்கும் தெரிவித்து ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உதவி செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வராக அரசு அறிவுறுத்தியுள்ளது.