இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அனைத்து ஆதார் எண் வைத்திருப்பவர்களும் தங்களின் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உதவி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்கள் அனைத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியாகிய அறிவிப்பில் ஆதார் அட்டை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடு ஜூன் 14ஆம் தேதி வரை இருந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது அறிவிப்பின்படி மக்கள் தங்களுடைய ஆதார் ஆவணங்களை எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச சேவை மை ஆதார் ஹோட்டலில் மட்டுமே கிடைக்கும் எனவும் நீங்கள் ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் அட்டையை புதுப்பித்தால் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.