இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை அனைத்து விதமான அரசு மற்றும் அரசு சாரா செயல்பாடு களுக்கும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையில் உள்ள பழைய புகைப்படத்தை இணையதளம் வாயிலாக எப்படி மாற்றலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற முகவரிக்குள் சென்று update Aadhar என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான விவரங்களை பூர்த்தி செய்துவிட்டு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் பயோமெட்ரிக் முறையில் ஊழியர் சரிபார்த்த பிறகு ஆதார் அட்டையில் தற்போதைய போட்டோ அப்டேட் செய்யப்படும்.

அதன் பிறகு ஆதார் ஊழியர் உங்களுக்கு ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) வழங்குவார். இது முடிந்த உடன் 90 நாட்களுக்குள் புகைப்படம் மாற்றப்பட்ட ஆதார் அட்டை உங்கள் கைகளுக்கு வரும். நீங்கள் விண்ணப்பித்த நிலையை ஆதார் அட்டை இணையதளத்தில் URN எண்ணை பயன்படுத்தி கண்காணிக்கலாம். உங்களுடைய ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்ட பிறகு நீங்கள் அது தொடர்பான நகலை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஆதார் அட்டையில் புகைப்படத்தை புதுப்பிப்பதற்கான முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.