கடந்த இரண்டு வருடமாக ஏற்பட்ட கொரோனா தொற்றுக்குப் பின் பல்வேறு நிறுவனங்கள் செலவினங்களை குறைப்பதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கூகுள், பேஸ்புக், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் பிரபல விமான போக்குவரத்து நிறுவனமான போயிங்  இந்த வருடம் 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய உள்ளதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம் பொறியியல் மற்றும் தயாரிப்புத் துறையில் கூடுதலாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.