
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். இதனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு முறைகளில் புதுப்பித்துக் கொள்ளலாம். இதனை பயன்படுத்தி நம் ஆதாரை புதுப்பிக்கும் போதே சில நேரங்களில் கோரிக்கை நிராகரிக்கப்படும்.
அதற்கான காரணம் நீங்கள் படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாமல் இருக்க வாய்ப்புள்ளது. இல்லையென்றால் நீங்கள் மாற்ற முயற்சிக்கும் விவரத்திற்கான உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்யாமல் இருக்கலாம். இதனால் உங்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படும். இப்படியான சூழலில் நீங்கள் உங்களின் விண்ணப்ப படிவத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து விவரங்களில் தவறு இருந்தால் அதனை சரி செய்து மீண்டும் அப்டேட் கொடுத்தால் உங்களின் விண்ணப்பம் ஏற்கப்படும்.