2023 இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த தசுன் ஷனக இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்..

2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில்  இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று கொழும்பில் உள்ள ஆர் பிரேமதாசா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்பெல்லுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவரில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கையில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் மட்டுமே 17 ரன்கள் எடுத்தார். இலங்கை அணியில் கேப்டன் ஷானகா உட்பட 5 பேர் டக் அவுட் ஆகினர். இது ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையின் 2வது குறைந்தபட்ச ஸ்கோராகும்.

இந்த போட்டியில் முகமது சிராஜின் 6 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியாவின் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ராவின் 1 விக்கெட்டும் காரணமாக ஒட்டுமொத்த இலங்கை அணியும் சரிந்தது. முகமது சிராஜின் புயல் பந்துவீச்சால் இலங்கை அணி மொத்தமாக சரிந்தது. சிராஜ் 7 ஓவர்களில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

பின்னர் இலக்கை துரத்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா களமிறங்கவில்லை. இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களுடனும், சுப்மான் கில் 19 பந்துகளில் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 8வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி 2 முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில்  முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு வருத்தம் தெரிவித்த இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா, இலங்கை அணிக்கு ஆதரவளிக்க அதிக எண்ணிக்கையில் வருகை தந்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்தார். திரளாக வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், நாங்கள் உங்களை ஏமாற்றியதற்கு வருந்துகிறேன். கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள் உங்களை உண்மையிலேயே நேசிக்கிறோம். மேலும் அவர்கள் விளையாடும் கிரிக்கெட்டின் பிராண்டிற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று ஷானகா கூறினார்.

ஷானகா பேசியதாவது,”இது சிராஜின் சிறப்பான பந்துவீச்சு, அவர் ஆட்டத்தில் எப்படி செயல்பட்டார் என்பது அவருக்கு பெருமை. பேட்டர்களுக்கு இது ஒரு நல்ல ஆடுகளமாக இருக்கும் என்று நான் நினைத்தேன், ஆனால் மேகமூட்டமான சூழ்நிலை ஒரு பங்கைக் கொண்டிருந்தது, பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியுள்ளது மற்றும் இது கடினமான நாள். இன்னும் கொஞ்சம் தொழில்நுட்பமாக இருந்திருக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் இந்த போட்டியில் தனது பல வீரர்களின் செயல்திறனுக்காக அவர்களை பெருமையாக பேசினார். சரித் அசலங்க, குசல் பெரேரா மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் வருங்கால நட்சத்திரம் என பாராட்டினார். “சதீர சமரவிக்ரம மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் நடுப்பகுதியில் எப்படி பேட்டிங் செய்தார்கள், அதே போல் சரித் அசலங்கா பேட்டிங் செய்த விதம் மற்றும் அந்த அழுத்தத்தை அவர் சிறப்பாக கையாள்வதும் ஒரு நேர்மறையான அம்சமாகும்.

இந்திய சூழ்நிலையில், இந்த மூவரும் சிறப்பாக செயல்பட்டு அபாரமாக ரன் குவிப்பார்கள். மேலும் துனித். வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன மற்றும் கசுன் ராஜித மற்றும் பிரமோத் மதுஷன் ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் வரும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன். ஐந்து முக்கிய வீரர்கள் இல்லாமல் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருப்பது நல்லது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் தொடங்கிய இடத்திலிருந்து இது ஒரு நல்ல அறிகுறி,”

கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்பது எங்களுக்குத் தெரியும். நல்ல அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தோம். இது ஒரு பெரிய பிளஸ்,திரளாக வந்திருந்த ஆதரவாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் உங்களை ஏமாற்றியதற்கு மன்னிக்கவும். இன்னும் பெரிய ஆதரவுக்கு நன்றி. இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று கூறி முடித்தார் .