குஜராத்தின் சூரத்தில் உள்ள வைர வியாபாரி கனுபாய் அசோதாரியா. இவர் ஆண்டுதோறும் வைர கணபதியை வழிபட்டு வருவது வழக்கம்.  182.3 காரட் கொண்ட 36.5 கிராம் எடை கொண்ட இது, ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே வெளியில் கொண்டு வரப்படுமாம். அன்றைய தினம் மட்டும் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இது கோஹினூர் வைரத்தை விட பெரியது என்று கூறப்படுகிறது. சந்தையில் இதன் மதிப்பு ரூ.600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கனுபாய் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் சென்று அங்கிருந்து இந்த வைரங்களைக் கொண்டு வந்துள்ளார்.