ஆண்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது சரியான காரணத்தை மருத்துவர்கள் குறிப்பிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து, சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் (டிஜிஹெச்எஸ்) டாக்டர் அதுல் கோயல் மருத்துவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தின் நகல்கள் மருத்துவ சங்கங்கள், மருந்தாளுநர் சங்கங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. ஆண்டிபயாடிக் மருந்துகள் தேவைப்படும்போது மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். மருத்துவர் பரிந்துரையுடன் மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் எனவும் மருந்தாளுநர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.