Whatsapp நிறுவனமானது பயனர்களுடைய அனுபவத்தை சிறப்பாக்கும் விதமாக எக்கச்சக்க அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அது மட்டுமின்றி பயனர்களுக்கு பாதுகாப்பையும், வழங்குவதால் பில்லியன்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்துகிறார்கள். நாடு முழுவதும் சுமார் 40 கோடி பேர் WhatsApp-ஐ பயன்படுத்தி வரும் நிலையில், அதில் வரும் அப்டேட்டுகளை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பண ஆசையை தூண்டும் மர்ம கும்பல், இதுவரை ரூ.10,319 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், +84, +63, +24 போன்ற வெளிநாட்டு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது