தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரஞ்சித். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். தற்போது கவுண்டன் பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஆணவ கொலை பற்றி பேசியது இணையதளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று அவர் கூறியதாவது, பெற்ற பிள்ளையே உலகம் என்ற பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது ‌ என்பது தெரியவரும் போது அவர்களுக்கு கோபம் வருகிறது. இது கோபம் தான் தவிர வன்முறை அல்ல என்று ஆணவ கொலைக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக கூறினார்.

இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விசிக கட்சியின் தலைவர் தொல்.‌ திருமாவளவனும்ம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆணவக் கொலையை குற்றமில்லை என்று சொல்வது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அது வணிக நோக்கமாக இருக்க வேண்டும். இதை வைத்து படம் எடுத்து பணம் சம்பாதித்து லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக சமூகத்திற்கும் சமூக நல்லினத்திற்கும் எதிராக பேசியுள்ளார். மேலும் இதுபோன்ற கருத்துக்களை பரப்புவது நாட்டுக்கு நல்லதல்ல. மேலும் இந்த கருத்தை மிகுந்த கவலை அளிக்கிறது என்று கூறினார்.