உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை முற்றாக மீறி, 22 பேருடன் திணறித்திணறி சென்ற ஒரு ஆட்டோ-ரிக்ஷா, போலீசாரால் பின்தொடரப்பட்டு பிடிக்கப்பட்டது. மிகக் குறுகிய இடத்தில் இத்தனை பயணிகளை ஏற்றி சென்றது, பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையிலானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது போன்ற அசாதாரணமான பயணம் பொதுமக்களின் உயிருக்கு நேரடி அபாயமாக இருக்கிறது என போலீசார் எச்சரித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்தில் விரைந்து சென்று, ஆட்டோவை பறிமுதல் செய்து, ஓட்டுநருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pune News Age (@punenewsage)

சமூக வலைதளங்களில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே பொதுப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பி, ஆட்டோ ஓட்டுநர்களின் பொறுப்பற்ற நடத்தையை வலியுறுத்தும் வகையில் வைரலாகியுள்ளது. இதுபோன்ற விடயங்களில், விரைவாக நடவடிக்கை எடுத்த, போலீசாரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.