வேலூரில் விஜய் பிரச்சாரம் செய்தபோது, வெயிலைத் தவிர்க்கக் கூரை அமைக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, “நான் முன்பே சொன்னது போலவே தம்பி விஜய் இப்போது கூரை அமைத்துப் பிரச்சாரம் செய்கிறார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.
அதே சமயம், விஜய்யின் கூட்டத்தில் ஏற்படும் தள்ளுமுள்ளு மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து கவலை தெரிவித்த அவர், “தமிழ்நாட்டு ஆட்சியை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது அப்புறம் இருக்கட்டும், முதலில் உங்கள் பின்னால் வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று விஜய்க்கு நேரடியாக ‘செக்’ வைத்தார். தொண்டர்களின் பாதுகாப்பில் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
