நொய்டாவில் இரண்டு பெண்கள் குடும்பிப்பிடி சண்டை போடும் வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த சம்பவம் கிரேட்டர் நொய்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு கல்லூரி மாணவிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

அதனை மற்ற மாணவர்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இறுதியில் இரண்டு பெண்கள் வந்து சண்டையை தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.