
நடிகை ஆண்ட்ரியா ‘பிசாசு 2’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் சில காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேசிய அந்த படத்தின் இயக்குநர் மிஷ்கின், “அவை நிர்வாண காட்சிகள் அல்ல. ஆனால் சில ஆடைகள் இல்லாமல் ஆண்ட்ரியாவின் அனுமதியுடன் படமாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சென்சார் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், அந்த காட்சிகளை நீக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.