
கடந்த 1991 ஆம் வருடம் ராஜஸ்தான் மாநிலத்தில் 26 வயது இளைஞர் ஒருவர் 6 வயது சிறுமியின் ஆடைகளை கழற்றி அவரை நிர்வாணப்படுத்தி உள்ளார். 33 வருடங்களுக்கு முன்பாக நடந்த இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இது குறித்த தீர்ப்பில் சிறுமியின் உள்ளாடைகளை கழற்றி நிர்வாண படுத்துவது பாலியல் பலாத்காரம் முயற்சி கிடையாது.
பாலியல் பலாத்காரம் முயற்சி என்றால் அதையும் தாண்டி செய்திருக்க வேண்டும். எனவே குற்றம் சாட்டப்பட்டவர் மீது மானபங்குப்படுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பானது தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.