
மதுரை மாவட்டம் ராயல் அவென்யூவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி. இந்த தம்பதியினர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.
ஆனால் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து கடந்த 2006 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த பிரேம்குமார், காளீஸ்வரி ஆகிய இருவரையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதனால் நேற்று முன்தினம் போலீசார் பிரேம்குமார், காளியம்மாள் ஆகிய இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.