
உத்திரபிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் தாக்கூர். இவர் புதிதாக கார் வாங்கியுள்ளார். அந்த காருக்கு பூஜை போடுவதற்காக தனது ஒன்றரை வயது மகள் ரேயான்சுடன் கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் ரேயான்ஸ் கார் கதவு வழியாக தலையை வெளியே நீட்டி சுற்றி நின்ற குரங்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரோஷன் கார் என்ஜினை இயக்கிய போது எதிர்பாராதவிதமாக கண்ணாடி மேலே உயர்ந்தது.
இதனால் கண்ணாடியில் தலை சிக்கி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரோஷன் தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.