உத்தர பிரதேசத்தில் குழந்தையின் பாலினத்தை அறிய கர்ப்பிணி மனைவியின் வயிற்றை அறுத்த கணவருக்கு சவுரப் சக்சேனா மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 5 பெண் குழந்தைகளுக்கு தந்தையான பன்னா, ஆண் குழந்தை வேண்டும் என ஆசையாக இருந்தார்.

ஆனால், கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவிக்கு ஆறாவதாக பெண் குழந்தை பிறக்கப்போவதாக பூசாரி ஒருவர் கூறியதால் ஆத்திரமடைந்த அவர், மனைவியின் வயிற்றை அரிவாளால் கிழித்தார்.