2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியா கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போது ஏற்பட்ட ஹேண்ட்ஷேக் சர்ச்சையால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (PCB), போட்டியை புறக்கணிக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி வருவதை மையமாக கொண்ட விவாதம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இது வெறும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஆசியா கோப்பையில் பங்கேற்காமல் போனால், பாகிஸ்தானுக்கு சுமார் 12 முதல் 16 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பாக ஏற்படும்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ACC) வருடாந்திர வருவாயில் 75% டெஸ்ட் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளுக்குத் தலா 15% வீதம் பங்காக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 25% சதவீதம் துணை நாடுகளுக்கு செல்கிறது.
இதில், டிவி ஒளிபரப்பு, டிஜிட்டல் ரைட்ஸ், ஸ்பான்சர்கள் மற்றும் டிக்கெட் விற்பனை ஆகியவையே முக்கிய வருவாய் மூலமாக உள்ளன. BCCI போன்ற பெரும் வருவாய் கொண்ட அமைப்பாக இல்லாத பாகிஸ்தான் போர்டுக்கு, ஆசியா கோப்பை போன்று வருவாய் உறுதியான போட்டியை இழப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில், PCB தலைவரும், ACC தலைவருமான மொஹ்சின் நக்வி, ஹேண்ட்ஷேக் சர்ச்சைக்கு அமைய இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குப் பிறகு, ரெஃபரி ஆண்டி பைக்ராஃப்ட்டை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது.
இதனால், பாகிஸ்தானின் மொத்த 227 மில்லியன் டாலர் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட பட்ஜெட்டில் 7% வரை வருமான இழப்பு ஏற்படலாம். மேலும், பாகிஸ்தான் ACC-யில் தனிமைப்படும் அபாயமும் எழுகிறது. ஒளிபரப்பாளர்களும் இந்த போட்டியை வருவாய் அடிப்படையில் முக்கியமாகக் காண்பதால், பாகிஸ்தான் விலகினால் அவர்களின் அழுத்தமும் வரும் எனக் கணிக்கப்படுகிறது.
