குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் என்ற பகுதியில் ஆசியாவின் முதல் ஒட்டக பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. அமுல் நிறுவனத்தால்  சுமார் ரூ. 180 கோடி மதிப்பீட்டில் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டகப் பால் பதப்படுத்தும் ஆலைகள் துபாய் மற்றும் பாகிஸ்தானில் மட்டுமே இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது முதன்முதலாக ஆசியாவில் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டக பால் பதப்படுத்தும் ஆலையின் மூலம் பாலில் உள்ள துர்நாற்றம் நீக்கப்படுகிறது.

அதோடு ஒட்டகம் மேய்ப்பவர்களின் வருமானமும் அதிகரித்துள்ளதாக கட்ச் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த ஆலைக்காக தினமும் 5 இடங்களில் இருந்து ஒட்டகபால் சேமிக்கப்படுகிறது. அதன்படி ஒரு நாளைக்கு 3500 லிட்டர் முதல் 4500 லிட்டர் வரை பால் சேகரிக்கப்படுகிறது. கூடிய விரைவில் ஒட்டக பாலில் இருந்து ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் போன்றவைகளும் தயார் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஒட்டக பாலில் நீரிழிவு நோயை குணப்படுத்தும் தன்மை இருப்பதால் ஒட்டக பாலுக்கான தேவையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.