தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சசிகுமார் தற்போது கருடன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சூரி, உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கருடன் படத்தின் டிரைலர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் நெருக்கமான நண்பர்களாக இருக்கும் நிலையில் உன்னி முகுந்தலுக்கு விசுவாசியாக சூரி நடித்துள்ளார். இதில் சூரியின் மாறுபட்ட நடிப்பு கதையின் சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது  சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.