கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ஒரு சில மாற்றங்கள் வரப்போகிறது. அது குறிப்பாக அந்த இரண்டு விஷயங்கள் மாறுவதால் பெங்களூர் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. அதாவது நந்தினி பால் பாக்கெட் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் அளவில் அதிகரிக்க போகிறதாம். நீல நிற பாக்கெட்டின் விலை லிட்டருக்கு 39 ரூபாயிலிருந்து 42 ஆக அதிகரிக்க உள்ளது. இதனோடு தயிர் விலையும் லிட்டருக்கு மூன்று ரூபாய் அதிகரித்து 47 ரூபாயிலிருந்து 50 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.

நிதிநிலைமையை சரி செய்வதற்காகவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். அடுத்ததாக பெங்களூர் மைசூர் எக்ஸ்பிரஸ் வே சாலையில் வரும் ஆகஸ்ட் 1 முதல் 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், அனைத்து மோட்டார் அல்லாத வாகனங்கள், ஹைட்ராலிக் வாகனங்கள் ஆகியற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை முதன்மை சாலையை விட்டு விட்டு பக்கத்தில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.