இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தன்னுடைய சந்தாதாரர்களுக்காக ஜீவன் கிரண் என்ற ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசியின் கீழ் விபத்து மரண நிதி பலன், ஊனமுற்றோர் பலன் மற்றும் விபத்து பலன் ஆகியவற்றை பெறலாம். மேலும் கூடுதலாக ஐந்து வருடங்களில் முதிர்வு அல்லது இறப்பு பலனை பெறுவதற்கான தீர்வு விருப்பமும் இருக்கிறது. இந்த டேர்ம் அஷுரன்ஸ் திட்டம் ஆயுள் காப்பீடாளரின் முதிர்வு தேதியில் கூடுதல் பிரிமியங்கள், ரைடர் பிரீமியங்கள் மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் தவிர்த்து செலுத்தப்பட்ட மொத்த பிரிமியங்கள் போன்றவற்றை திருப்பிக் கொடுக்கிறது.

பாலிசி காலத்தின் போது மரணம் ஏதாவது ஏற்பட்டால் உறுதி அளிக்கப்பட்ட தொகை செலுத்தப்படும். 18 முதல் 65 வரை வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். நடுத்தர ஆயுள் காப்பீட்டுக்கான இந்த திட்டத்தில் குறைந்தபட்ச காப்பீட்டு தொகை 15 லட்சம். பாலிசி காலம் 10 முதல் 40 வருடங்கள். இந்த திட்டத்தில் பயன் பெற எல்ஐசி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக இந்த பாலிசி வாங்கிக் கொள்ளலாம்.